புதுடெல்லி: அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா தொடர்புடைய வழக்கில் ₹300 கோடி மதிப்புள்ள நிலத்தைபறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது முதல்வராக இருந்தவர் பூபிந்தர்சிங் ஹூடா. தற்போது அரியானா எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். அரியானாவில் எம்3எம் ரியல் எஸ்டேட் குழு சார்பில் நடந்த நில மோசடி ெதாடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த மோசடியில் பூபிந்தர்சிங் ஹூடாவுக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் எம்3எம் குழுமத்திற்கு சொந்தமாக குருகிராமில் உள்ள ₹300 கோடி மதிப்புள்ள நிலத்தை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் இந்த நிலத்தை இணைக்க அமலாக்கத்துறை சார்பில் தற்காலிக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டெல்லியை ஒட்டி அமைந்துள்ள குருகிராம் மாவட்டத்தில் உள்ள ஹர்சரு தெஹ்சில் பஷாரியா கிராமத்தில் இந்த நிலம் அமைந்துள்ளது. அமலாக்கத்துறை ெமாத்தம் 88.29 ஏக்கர் நிலத்தை இந்த உத்தரவு மூலம் பறிமுதல் செய்துள்ளது.