ஜலவார்: பாஜ ஆளும் ராஜஸ்தானின் ஜலவார் மாவட்டத்தில் உள்ள மனோஹெர்தானாவில் பிப்லாட் அரசு பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் நேற்று காலை மாணவர்கள் வழக்கம் போல் பிரார்த்தனைக்காக கூடியுள்ளனர். அப்போது 6 மற்றும் 7 ம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறைகள் இருக்கும் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இதனால் அங்கிருந்த மாணவர்கள் அலறியடித்து ஓடினார்கள். சுமார் 35 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக தெரிகிறது.இதில், 7 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 28 மாணவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிகிறது.