மைசூரு: மைசூரு அரச பரம்பரையை சேர்ந்த ராஜமாதா பிரமோதாதேவி மற்றும் யதுவீர் ஆகியோர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். அரச பரம்பரையை சேர்ந்த ராஜமாதா பிரமோதாதேவி மற்றும் மக்களவை உறுப்பினரான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் திருப்பதியில் நடந்த உற்சவத்தில் கலந்து கொண்டனர். நாட்டின் நன்மைக்காக மைசூரு ராஜமாதா பிரமோதாதேவி சிறப்பு பூஜையை செய்தார். அதேபோல், திருப்பதியில், ஸ்ரீதேவி, பூதேவி ஸ்ரீ மல்லப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர், பிரமோதாதேவி மற்றும் யதுவீர் ஆகியோர் உற்சவ மூர்த்திகளின் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
Advertisement