பெங்களூரு: காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. இவருக்கு வயது 82. கலபுர்கி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர், 2 நாட்களுக்கு முன் இரவு திடீரென பெங்களூருவில் உள்ள எம்எஸ் ராமய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தான் அவருக்கு இதயம் சார்ந்த பிரச்னை இருந்தது தெரியவந்தது. அதாவது கார்கேவின் இதய துடிப்பில் மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நள்ளிரவில் அறுவை சிகிச்சை மூலமாக பேஸ் மேக்கர் கருவி உடலில் பொருத்தப்பட்டுள்ளது. கார்கேவின் மகனும், கர்நாடகா அமைச்சருமான பிரியங்க கார்கேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி கார்கேவின் உடல்நலம் பற்றி விசாரித்தார்.
+
Advertisement