ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை; ராணுவம் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும்: முப்படை தலைமை தளபதி சவுகான் வலியுறுத்தல்
புதுடெல்லி: டெல்லியில் உள்ள சுப்ரோதா பூங்காவில் நேற்று நடந்த கருத்தரங்கில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் கலந்து கொண்டு பேசியதாவது: போர்களில் இரண்டாம் இடம் பெறுபவர்கள்(ரன்னர் அப்) என யாருமில்லை. ராணுவம் அதிகளவிலான செயல்பாட்டு தயார் நிலையை பராமரிக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடியவில்லை. வாரத்தின் 24 மணி நேரமும், ஆண்டின் 365 நாள்களும் விழிப்புடன் இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.