புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளதாவது: கடந்த பத்தாண்டுகளில்,மோடி ஏற்படுத்திய ஐந்து தொடர்ச்சியான அதிர்ச்சிகளால் இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வேறு யாரும் இதற்கு பொறுப்பேற்க முடியாது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை நமது வளர்ச்சி வேகத்தை முற்றிலுமாக சீர்குலைத்து, கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டது.
ஜிஎஸ்டி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலிருந்து அதிகளவு இறக்குமதிகள் நாடு முழுவதும் லட்சக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மூடுவதற்கு வழிவகுத்தது.இந்திய தொழிலதிபர்கள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சென்று அங்கே குடியேறுகின்றனர். கடந்த பத்தாண்டில் பெரும்பாலான இந்தியர்களின் ஊதியங்கள் அதிகரிக்கவில்லை என்று கூறியுள்ளார்.