ஷில்லாங்: மேகாலயாவில் முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி (என்பிபி) ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2023ல் மாநில சட்ட பேரவைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேர் வெற்றி பெற்றனர். அதில் ஒருவரான சலேங் ஏ. சங்மா 2024ல் நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதே ஆண்டு செலஸ்டின் லிங்டோ,கப்ரியேல் வாஹ்லாங்,சார்லஸ் மார்ங்கார் ஆகியோர் கட்சியில் இருந்து விலகி ஆளும் என்பிபி கட்சியில் சேர்ந்தனர்.இந்த நிலையில் பேரவையில் எஞ்சியிருந்த ஒரேயொரு காங்கிரஸ் எம்எல்ஏவான ரோனி லிங்டோ நேற்று ஆளும் கட்சியில் சேர்ந்தார்.