புதுடெல்லி: மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம், மெய்டீ மற்றும் குக்கி சமூகத்தினரிடையே இனக்கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 260 பேர் கொல்லப்பட்டனர். முதல்வர், அமைச்சர், அரசு அதிகாரிகளின் வீடு உட்பட பல வீடுகள்,வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையை கட்டுப்படுத்த மாநில அரசு தவறியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில்,முதல்வராக இருந்த பிரேன் சிங் கடந்த பிப்ரவரியில் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், மணிப்பூரில் அமலில் உள்ள ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்து உள்ளார். இந்த உத்தரவு வரும் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் அமலுக்கு வரும்.