Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மணிப்பூரில் 90 துப்பாக்கிகள், 728 வெடிமருந்துகள் பறிமுதல்

இம்பால்: மணிப்பூரில் 90 துப்பாக்கிகள், 728 வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மணிப்பூரில் இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தவ்பால், காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் ஆகிய 5 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சிஆர்பிஎப், பிஎஸ்எப், ராணுவம், அசாம் ரைபிள்ஸ் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர ஆயுத சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 3 ஏகே ரக துப்பாக்கி, ஒரு எம்16 ரைபிள் உட்பட 90 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 21 கையெறி குண்டுகள் உட்பட 728 வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. இதனை தவிர 21 தோட்டாக்கள், 24 வொயர்லெஸ் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.