திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள செத்திப்புழா பகுதியை சேர்ந்தவர் ஜோசப் (62). இவரது மனைவி ஷீபா (58). நேற்று இருவரும் தங்களுடைய காரில் அருகில் மான்வெட்டம் என்ற பகுதியில் உள்ள ஒரு நண்பரின் வீட்டுக்கு சென்றனர். காரை ஜோசப் ஓட்டினார்.
நண்பரின் வீட்டுக்கு முதன் முதலாக செல்வதால் கூகுள் மேப் காட்டிய வழியில் அவர் காரை ஓட்டிச் சென்றார். கூகுள் மேப் காட்டிய வழியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் சாலையை ஒட்டி இருந்த ஓடையில் பாய்ந்துவெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியது. அங்கிருந்தவர்கள் ஜோசப்பையும், ஷீபாவையும் மீட்டனர்.