திருவனந்தபுரம்: கேரளா முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரங்கள் விழுந்ததில் வீடுகள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த கன மழைக்கு 3 பேர் பலியானார்கள்.
கண்ணூர் சூடாட்டில் கடலில் பைபர் படகு கவிழ்ந்து கன்னியாகுமரியை சேர்ந்த ஆன்டனி என்ற மீனவர் உயிரிந்தார். 4 மீனவர்கள் காயமடைந்தனர். கண்ணூர் கூத்துபறம்பு பகுதியில் வீட்டின் மீது மரம் விழுந்து சந்திரன் என்பவர் இறந்தார். இடுக்கி மாவட்டம் உடும்பன் சோலையில் பலத்த காற்றுக்கு மரம் விழுந்து தமிழ்நாடு தேவாரம் பகுதியை சேர்ந்த பெண் தோட்ட தொழிலாளி லீலாவதி இறந்தார்.