கும்லா: ஜார்க்கண்ட் ஜாகுவார் மற்றும் கும்லா போலீசார் இணைந்து கும்லா மாவட்டத்தில் உள்ள காக்ரா காட்டில் தேடுதல் வேட்டை நடத்திய போது பதுங்கி இருந்த நக்சல்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. துப்பாக்கி சூடு நிறுத்தப்பட்ட பின்னர் சம்பவ இடத்தில் 3 நக்சல்கள் பலியாகி கிடந்தனர். மேலும் அங்கிருந்து துப்பாக்கி, வெடிமருந்துகள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Advertisement