புதுடெல்லி: பெங்களூருவைச் சேர்ந்த சிம்பிள் (simpl) என்ற கடன் சேவை மொபைல் ஆப் நிறுவனம் ரூ.913 கோடிக்கு அந்நிய செலாவணி விதிகளை மீறியதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ‘இப்போது வாங்குங்கள், பிறகு செலுத்துங்கள்’ என்ற கவர்ச்சிகரமான வாசகத்துடன், சிறு பொருட்கள் வாங்குவதற்கான பணத்தை கூட இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு கடனாக வழங்கும். இந்த பணத்தை தவணை முறையிலும் செலுத்தலாம். இந்த நிறுவனம் இந்திய அரசிடம் முன் அனுமதி பெறாமல் ரூ.913 கோடிக்கு அந்நிய செலாவணி பெற்று விதிமீறலில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.
Advertisement