தென்கனரா: கர்நாடக மாநிலம் தென்கனரா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலா கிராமம், நேத்ராவதி ஆற்றங்கரையில் நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 5வது நாளாக நேற்று சோதனை நடந்தது. அப்போது, 7 மற்றும் 8வது பாயின்ட்களில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அங்கு, எந்த தடயமும் கிடைக்கவில்லை.
எஸ்ஐடியின் ரகசியம் பாதுகாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, 7வது பள்ளம் தோண்டும் பகுதியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. சோதனையின்போது சுற்றிலும் திரை சீலைகள் கட்டப்பட்டு குழி தோண்டப்பட்டது.
7 மற்றும் 8 புள்ளிகளில் எதுவும் கிடைக்காததால் இன்று மீண்டும் 9வது பாயின்ட்டில் பள்ளம் தோண்டப்படும் என கூறப்படுகிறது. இது வரை கிடைத்த 25 மனித எலும்புகள் மணிப்பால் மருத்துவமனைக்கு பரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.