புதுடெல்லி: பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன் 7.89 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது இறுதி பட்டியலில் 7.24 கோடி பேர் உள்ளனர். இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பற்றிய விவரங்களை அறிய இந்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் மூலம் தகவல் பெற தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இறந்ததாக குறிப்பிட்டவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பீகாரை போன்று அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
+
Advertisement