சண்டிகர்: அரியானாவின் சோனிப்பட்டை சேர்ந்தவர் சிஆர்பிஎப் வீரர் கிரிஷன்(30). இவர் விடுப்பில் வந்திருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த கிரிஷன் மீது பைக்கில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றதாக தெரிகிறது.
தகவல் அறிந்து விரைந்த போலீசார் சிஆர்பிஎப் வீரரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை அறிக்கைக்கு அனுப்பிவைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்வார் யாத்திரையின்போது கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்கள் கிரிஷனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.