டாக்கா: வங்கதேச வங்கி ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆண் ஊழியர்கள் நீண்ட அல்லது அரை கை சட்டைகள் கொண்ட சாதாரண சட்டைகளையும், சாதாரண பேண்ட் மற்றும் காலணிகளையும் அணிய வேண்டும். ஜீன்ஸ் அல்லது கபார்டைன் பேன்ட் அணியக்கூடாது. அனைத்துப் பெண்களும் சேலை, சல்வார்-கமீஸ் , ஓர்னா அல்லது வேறு ஏதேனும் எளிய, அடக்கமான, தொழில்முறை நிற உடையுடன் எளிய தலைக்கவசம் அல்லது ஹிஜாப் மற்றும் சாதாரண செருப்புகள் அல்லது காலணிகளை அணிய வேண்டும்.
பெண்கள் குட்டைக் கை கொண்ட ஆடைகள் மற்றும் லெக்கின்ஸ் அணியக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியதால் இந்த அறிவுறுத்தல் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று வங்கதேச வங்கி செய்தித் தொடர்பாளர் ஆரிப் உசைன் கான் தெரிவித்தார்.