திருமலை: ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் தேர்தல் பிரச்சாரத்தின் போது, 30,000 மைனர் சிறுமிகள் மற்றும் பெண்கள் காணாமல் போனதற்கு அப்போது ஜெகன்மோகன் ஆட்சியில், மக்கள் சேவைக்காக நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள்தான் காரணம் என்று கூறினார். இதனை கண்டித்து சிலர் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். முந்தைய அரசும் அவர் மீது வழக்கு பதிவு செய்தது.
ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஆந்திராவில் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என முந்தைய ஆட்சியில் தன்னார்வலராக இருந்த ஜடா ஷ்ரவன் குமார் என்பவர் குண்டூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட குண்டூர் நீதிமன்றம், பவன் கல்யாணுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.