Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சமக்ர சிக்‌ஷா நிதி கேட்டு ஒன்றிய அமைச்சருடன் அன்பில்மகேஷ் சந்திப்பு

சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சமக்ர சிக்‌ஷா திட்டத்துக்கான நிதியை வழங்க வேண்டும் என்று கேட்டு ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை டெல்லியில் சந்தித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கோரிக்ைக மனு கொடுத்தார். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய சமக்ர சிக்‌ஷா நிதியை கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்காமல் ஒன்றிய கல்வித்துறை இழுத்தடித்து வருகிறது. இந்த நிதியை பெற வேண்டி தமிழகத்தின் சார்பில் ஒன்றிய அரசுக்கு பலமுறை தமிழக அரசு கடிதம் எழுதியும், நேரில் சென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையை திணிப்பதில் பிடிவதாம் காட்டி வருகிறது. இந்த இழுபறிக்கு இடையே, நேற்று முன்தினம் தமிழகத்தின் கங்கை கொண்ட சோழபுரம் வந்த பிரதமர் நநேரந்திர மோடியை, தமிழக அரசின் சார்பில் வரவேற்க சென்ற அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். அதன் ெ தாடர்ச்சியாக தமிழக முதல்வரும் மேற்கண்ட கோரிக்கையை வைத்தார். இந்நிலையில் தான், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, நேற்று டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரபிரதானை நேரில் சந்தித்து, சமக்ரசிக்‌ஷா திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள மத்திய நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ஒரு மனுவை கொடுத்தார்.

அந்த மனுவில் 2024-2025 ஆண்டுக்கான நிலுவைத் தொகை மற்றும் 2025-2026ம் ஆண்டுக்கான முதல் தவணையை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதானை, தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி டெல்லியில் நேற்று சந்தித்தபோது, அவருடன் நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.