பெங்களுரு : ரஷ்யாவை சேர்ந்த பெண் இரண்டு மகள்களோடு கர்நாடகாவின் குகையில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறார்.
கர்நாடக மாநிலம் உத்தரகாண்ட மாவட்டத்தில் ராமதீர்த்தமலை அமைதியுள்ளது. இந்த மலை அடர்வனப்பகுதி ஆகும் இங்கு கடந்த 9ஆம் தேதி கோகர்ண போலீசார் இன்ஸ்பெக்ட்டர் ஸ்ரீதர் தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடு பட்டுருந்தனர். சுற்றுலா பயனிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் இந்த பணியில் போலீசார் ஈடுபடுவது வழக்கம் அப்போது நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியில் அமைந்து இருக்கும் குகைக்கு அருகே வெளிநாடு பெண் ஒருவர் நடமாடுவது தெரியவந்தது இதனை எடுத்து அவரை பிடித்து விசாரித்து உள்ளனர்.
அப்போது அந்த வெளிநாட்டு பெண் இரண்டு மகள்களோடு தங்கி இருப்பது தெரியவந்தது அதனை பார்த்து போலீசார் அதிர்ச்சிஅடைத்தனர் இதனை அடுத்து மூன்று பேரையும் போலீசார் மீட்டு விசாரணை நடத்தியதில் திடீகிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது மீட்கபட பெண்ணின் பெயர் மீனாகுத்தின என்ற மோகி அவருக்கு வயது 40 ரஷ்யாவை சேர்ந்த இவர் 2016ஆம் ஆண்டு பிஸ்னஸ் விசாவில் இந்தியவிற்கு வந்துருகிறார்
மோகிக்கு ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் இருந்துஉள்ளது யோகாவும் இந்தியாவின் ஆன்மீக கலாச்சாரமும் அவரை வெகுவாக கவர்ந்து உள்ளது இதனால் இந்தியாவிலே தங்கமுடிவு செய்து இருக்கிறார் கோவாவில் உள்ள ரிசார்ட் ஒன்றில் வேலை பார்த்துஉள்ளார் 2017 ஆம் ஆண்டு அவரது விசா முடித்துவிட்டது கோவாவில் இருந்து நேபாளம் சென்ற மோகி அங்கிருந்து கோகர்ண பகுதிக்கு வந்துருக்கிறார். அதன் பிறகு தான் ராமதீர்த்த மழையால் உள்ள இந்த குகையை கண்டுபிடித்து இருக்கிறார் இயற்கை நிலையில் வாழநினைத்த மோகி அந்த குகையிலேயே தங்கி யோகா தியானம் போன்றவற்றை செய்து வந்துஉள்ளார்.
கிட்டத்தட்ட 8 வருடங்களாக அவர் இந்தியாவிலேயே தங்கி இருக்கிறார் மோகிக்கு 6 வயதில் பிரேமா , 4 க்கு வயதில் ஆமா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன அவர் இருவருமே இந்தியாவில் தான் பிறந்து இருக்கிறார்கள். குழந்தைகளின் தந்தை யார் மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளை பெற்றுக்கொண்டார அல்லது குகையில் அவரை சுயப்பிரசவம் செத்துக்கொண்டாரா போன்ற போலீசாரின் கேள்விகளுக்கு மோகி பதில்அளிக்க மருத்துவிட்டார் மோகி தங்கி இருந்த குகை மிகவும் ஆபத்து நிறைந்தது அந்த குகை பகுதியில் கடந்த 2024க்கு ஜூலை மாதம் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது அதே போல் ஆபத்து நிறைந்த வன விலங்குகள் இந்த இடத்தில் அதிகமாக நடமாடுகின்றன. விஷ பாம்புகளும் அங்கு உலா வருகின்றன.
அனல் மோகி அந்த ஆபத்துகளை உணராமல் தன்னுடைய இரண்டு மகள்களோடு அங்கு தங்கி இருக்கிறார் அதோடு பாம்புகள் எங்கள் நண்பன் அவை எங்களை ஒன்றும் செய்யாது என்றும் அவர் போலீசாரிடம் கூறி இருக்கிறார். குழைந்தைகளுக்கு ஓவியம்,யோகா.,பாட்டு போன்றவற்றை மோகி சொல்லி கொடுத்திருக்கிறார் அதோடு அவரது குகையில் சமைக்க தேவையான மளிகை பொருட்களும், செல்போனும் இருந்துள்ளது. இது குறித்து விசாரித்த போது கோகர்ண டவுன் சென்று மளிகை பொருட்கள் வாங்கியதாகவும் அங்கைய செல்போனிற்கு சார்ஜ் போடுவது வழக்கம் என்று குறியிருக்கிறார். இயற்கையோடு கூடிய தன்னுடைய வாழ்க்கைமுறையை மோகி சோசியல் மீடியாவில் அடிக்கடி பதிவுவிட்டுவந்ததாகவும் சொல்லப்படுகிறது .
அதோடு இந்த குகைக்கு ஏற்கனவே 3, 4 முறை அவர் வந்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது மோகியும் அவரது இரண்டு மகள்களையும் மீட்ட போலீசார் அவர்களுக்கு கவுன்சிலிங் வழகியுள்ளார்கள் அதன் பிறகு கார்வேர்ரில் உள்ள பெண்கள் மையத்திற்கு அவர்கள் அனுப்பி வைக்க பட்டார்கள் மேலும் அவரை ரஷ்யாவிற்கு அனுப்பிவைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் .