கோண்டா: உத்தரபிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உள்பட 11 பேர் பலியாகினர். உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டம் சிஹாகான் கிராமத்தை சேர்ந்தவர்கள் கார்குபூரில் உள்ள பிருத்விநாத் கோயிலுக்கு பிரார்த்தனை செய்ய நேற்று காலை காரில் சென்று கொண்டிருந்தனர்.
இதில் ஓட்டுநர் உள்பட 15 பேர் இருந்தனர். திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சரயு கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள், 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியாகினர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.