நாகர்கோவில்: குலசேகரம் அருகே இட்டகவேலி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 12 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். இங்கு திருவட்டார் அருகே ஆற்றூர் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் (57) தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 12 வயது மாணவிக்கு தலைமை ஆசிரியர் ரமேஷ்குமார் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
மாணவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் தீவிரமாக விசாரித்தபோது தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததுடன் இதனை வெளியே கூறினால் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிந்து, ரமேஷ்குமாரை கைது செய்தனர்.