செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இளங்குன்னி கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி புஷ்பா (63). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். இதில் கணவரும், மகனும் இறந்துவிட்டனர். இதனால் புஷ்பா தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். கடந்த 18ம்தேதி புஷ்பா தான் வளர்த்து வரும் பசுமாட்டை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். அன்று மாலை மாடு மட்டும் வீடு திரும்பியது.
நீண்ட நேரமாகியும் புஷ்பா வீடு திரும்பவில்லை. இந்நிலையில் புஷ்பா அவரது நிலத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் சடலமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 4.5 சவரன் நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது. எனவே மர்ம ஆசாமிகள் நகைக்காக புஷ்பாவை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.