ஓசூர், ஜூலை 5: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை மாஸ்தி சாலையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக டூவீலரில் சந்தேகப்படும்படி சென்ற நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் குட்கா பொருட்களை கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர் பேரிகை அடுத்த மிடுதேப்பள்ளியை சேர்ந்த வெங்கடேசப்பா (50) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து குட்கா மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement