Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுகையில் சகோதரர்கள் வெட்டிக்கொலை: 7 பேர் கைது

அறந்தாங்கி: புதுகையில் சகோதரர்கள் வெட்டிக்கொலை செய்ய வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் காமராஜ் நகரை சேர்ந்த காத்தமுத்து. இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களது மகன்கள் கண்ணன்(32), கார்த்திக். இருவரும் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் ஆவுடையார்கோவில் அடியார்குளம் வடக்கு கரையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். தகவலறிந்து ஆவுடையார் கோயில் போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளிகளைப் பிடிக்க, தனிப்படை அமைத்தனர்.

இந்நிலையில் அறந்தாங்கி அடுத்த நாகுடி காவல் நிலையத்தில் முத்துபேட்டையை சேர்ந்த காளிதாஸ் (35), யஸ்வந்த் (30), ராமநாதபுரம் முனீஸ்வரன் (31), அறந்தாங்கி முத்துக்குமார்(40), பஞ்சாத்தி ஐயப்பன்(22), சமத்துவபுரம் சத்திய சேகரன்(45), சதீஷ் குமார்(28) ஆகிய 7 பேர் நேற்று சரண் அடைந்தனர். மணல் விற்பனை, பைக் விற்பனை விவகாரத்தில் முன்விரோதத்தில் கொலை செய்ததாக கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 7 பேரையும் கைது செய்தனர்.