காத்மாண்டு: ஜாபா மாவட்டத்தில், போதை பொருளை கடத்திய பீகாரை சேர்ந்த முகமது இஸ்லாம்(36) என்பவர் போலீசை பார்த்ததும் தப்பி ஓட முயற்சித்தார். போலீசார் துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்தனர். சிட்வான் மாவட்டத்திற்குள் போதை பொருளை கடத்தி வந்த சேக் சபில் அக்தர்(37) என்பவர் கைது செய்யப்பட்டார். இன்னொரு சம்பவத்தில் பிரவுன் சுகர் கடத்திய பீகாரை சேர்ந்த தபாசுன் ஆரா(29) என்ற பெண்ணும் அவரது கூட்டாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
Advertisement