Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெல்லை மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

தியாகராஜநகர், ஜன.4: மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நெல்லை மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்களை கோட்ட செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நெல்லை மாவட்டம், வள்ளியூர் மின்கோட்ட செயற்பொறியாளர் வளனரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோட்டைகருங்குளம் மற்றும் பணகுடி துணை மின்நிலையங்களில் இன்று 4ம்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழை தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்குகள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவெம்பலாபுரம், பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், காவல் கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம் ஆகிய பகுதிகளில் இன்று (4ம் தேதி) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கல்லிடைகுறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (4ம்தேதி) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக ஆழ்வான்துலுக்கப்பட்டி, ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை, பாப்பாக்குடி கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுப்பத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி, அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணிமுத்தாறு, ஐமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்குபாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம், கடையம், பண்டாரகுளம், கட்டேரிபட்டி, முதலியார்பட்டி, பொட்டல்புதூர், திருமலையப்பபுரம், ரவணச்சமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூர், மாதாபுரம், மயிலப்புரம், வெய்க்காலிபட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் இன்று (4ம்தேதி) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.