திருச்செங்கோடு, நவ.28: தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 49வது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர திமுக சார்பில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், மருத்துவ பயனாளிகளுக்கு பால் மற்றும் ரொட்டி வழங்கப்பட்டது. தொடர்ந்து திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அண்ணா சிலை அருகில் 11 கிலோ எடை கொண்ட கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர செயலாளர்கள் நடேசன், கார்த்திகேயன், நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், மகளிர் அணியினர், இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.
+
Advertisement

