வேதாரண்யம், நவ. 26: வேதாரண்யம் தாலுகா நாகக்குடையான் ஊராட்சி மானாவரி சாகுபடி பகுதியாகும். இந்த பகுதியில் மழை பெய்தால் மட்டுமே ஒரு போக சாகுபடி செய்ய முடியும். இந்த நிலையில் தற்போது பெய்த மழையின் காரணமாக நாகக்குடையான் ஈரவாய்க்கால் பகுதியில் சுமார் 100 ஏக்கர் மழை நீர் சூழ்ந்து வடியாமல் நிற்கிறது. இதன் ்காரணமாக இளம் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இவ்வாறு அந்தப் பகுதியில் கடந்த ஆறு நாட்களுக்கு மேலாக மழைநீர் தேங்கியதால் தற்போது இளம் நெற்பயிர்கள் வேர் அழுகி முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. உடனடியாக வேளாண்மை துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

