Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சீர்காழியில் காவலர் குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்களுக்கு மருத்துவ முகாம்: மயிலாடுதுறை கலெக்டர் ஆய்வு

சீர்காழி, டிச.12: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி காவல் நிலைய குடியிருப்பு பகுதியில் காவலர் குடும்பத்திற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சீர்காழி லயன் சங்கம் மற்றும் டாக்டர் பாலாஜி ‘ஹெல்த் கேர் இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாமை லயன்ஸ் மாவட்ட ஆளுநர் மணிவண்ணன் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். லயன்ஸ் சங்கத் தலைவர் ஆரிப்அலி தலைமை வகித்தார். சீர்காழி இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் முன்னிலை வகித்தார். சீர்காழி டிஎஸ்பி அண்ணாதுரை முகாமை தொடங்கி வைத்தார்.

லயன்ஸ் மாவட்ட முன்னாள் ஆளுநர்கள் சுபம் பள்ளி கியான்சந்த், புவனேஸ்வரி சிறப்புரையாற்றினார். செந்தில்குமார் என்ற நபருக்கு ஹோட்டல் வைப்பதற்கு தள்ளுவண்டி மற்றும் பொருட்கள் லயன்ஸ் சங்கம் சார்பாக இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் மகளிர் காவல் நிலையத்திற்கு ரூ.13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு மரபெஞ்ச் வழங்கப்பட்டது.

லயன் சங்க மூத்த நிர்வாகிகள் சக்தி வீரன், கிருஷ்ணன், பாஸ்கரன், வட்டார தலைவர் சரவணகுமார் சோமசுந்தரம், வேல்முருகன், முத்துக்குமார், யுவராஜ் குமார், ஜலபதி, கார்த்திகேயன், சுரேஷ், காசி இளங்கோவன், ஜெயராமன் மற்றும் உறுப்பினர்கள் மகேஸ்வரன், பூவரசன், பிரபாகரன் மேலும் பலர் கலந்து கொண்டனர். செயலர் ராமராஜ் நன்றி தெரிவித்தார்.