Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு வருகிற சட்டசபை தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி

மயிலாடுதுறை, டிச.12: மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நெல் சேமிப்புக் கிடங்கு வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் காந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 ஐ முன்னிட்டு, 160.சீர்காழி, 161.மயிலாடுதுறை, 162.பூம்புகார் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்கு சாவடி மையங்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்புப் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, மயிலாடுதுறை வட்டம் சித்தர்காடு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நெல் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில், சட்டமன்றத் தேர்தல்-2026 வாக்குப்பதிவுக்காக வைக்கப்பட்டுள்ள 1,267 எண்ணிக்கை கட்டுப்பாட்டுக் கருவிகளும், 2,139 எண்ணிக்கை வாக்குப்பதிவு இயந்திரங்களும், 1,349 எண்ணிக்கை வாக்குப்பதிவு ஒப்புகைச்சீட்டு சரிபார்ப்பு இயந்திரங்களும் என மொத்தம் 4,755 எண்ணிக்கையிலான மின்னணு இயந்திரங்கள் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் காந்த், பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில், டிஆர்ஓ பூங்கொடி, மாவட்ட வழங்கல் அலுவலர் அர்ச்சனா , தனி வட்டாட்சியர் (தேர்தல்)முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.