தரங்கம்பாடி, டிச.5: தரங்கம்பாடி பகுதியில் டிட்வா புயல்மழையால் வீட்டின் சுவர் இடிந்து பாதிக்கப்பட்ட 3 குடும்பத்தினருக்கு எம்எல்ஏ நிவேதா முருகன் நிவாரண உதவிகள் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் டிட்வா புயல் மற்றும் மழை காரணமாக மருதம்பள்ளம் முந்திரிதோப்பை சேர்ந்த மகேந்திரன், மருதம்பள்ளம் வடக்குத்தெருவை சேர்ந்த பாலசுந்தரம், காலமநல்லூர் சங்கேந்தியை சேர்ந்த முனியன் ஆகியோரின் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தன

