பெங்களூரு: கர்நாடக சட்ட பேரவையில் அமைச்சர் எச்.கே.பாட்டீல் பெங்களூரு மாநகராட்சி சட்ட திருத்த மசோதா, அரசு டெண்டரில் 4 சதவீதம் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா, கேபிஎஸ்சி சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்தார்.அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோக், பட்ஜெட் மீதான விவாதம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இதன் மீதான விவாதத்திற்கு முதல்வர் சித்தராமையா பதில் அளிக்கவில்லை. அவையில் பட்ஜெட்டிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, அரசு டெண்டரில் முஸ்லிம் சமுதாயத்திற்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதற்கான சட்ட மசோதாவை இப்போதே நிறைவேற்றக்கூடாது என்றார்.
Advertisement