தேவையான பொருட்கள்
சேமியா - 200 கிராம்
காளான் - ஒரு கப்
புதினா - ஒரு கைப்பிடி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 குழி கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன்.
செய்முறை
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு தாளிக்கவும். புதினா, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும். மஞ்சள் தூள், பிரியாணி மசாலா சேர்த்து காளானை நறுக்கி சேர்த்து நன்கு கிளறவும். காளான் வெந்ததும் அரை லிட்டர் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும் வறுத்த சேமியாவை சேர்த்து அனலை குறைத்து கிளறவும். பிறகு எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறி இறக்கவும். நெய் ஊற்றி ஐந்து நிமிடம் மூடி வைத்து கிளறி பரிமாறவும். சுவையான காளான் சேமியா பிரியாணி தயார்.