சென்னை: காவல்த்துறையை நவீனபடுத்தும் திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு அதிநவீன வாகனங்களானது தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1 மாதத்திற்க்கு முன்பாக காவல்துறையினருக்கு 4 சக்கர வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருந்தார். அதனை தொடர்ந்து இன்று காவல்துறை பயன்பாட்டிற்காக இருசக்கர வாகனங்களை வழங்கினார்.
அதன்படி ரூ.74.08 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய 85 இருசக்கர வாகனங்களின் செயல்பாட்டை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதில், ஆண் காவலர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பல்சர் வாகனங்களும், பெண் காவலர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிவிஎஸ் ஜூபிட்டர் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளது.