Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆடி மாதத்தில் ஒருநாள் அம்மன் கோயில்கள் சுற்றுலா: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா வாகனம், அடுத்த மாதம் 18ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படுகிறது.

திருவல்லிகேணி சுற்றுலா வளாகத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு காளிகாம்பாள் கோயில், பாரிமுனை அங்காள பரமேஸ்வரி கோயில், ராயபுரம் வடிவுடையம்மன் கோயில், திருவொற்றியூர் பவானி அம்மன் கோயில், பெரியபாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், புட்லூர் திருவுடையம்மன் கோயில், திருமுல்லைவாயில் பச்சையம்மன் கோயில், திருமுல்லைவாயில் பாலியம்மன் கோயில், வில்லிவாக்கம் ஆகிய திருக்கோயில்களில் தரிசனம் செய்யலாம். இதில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும்.

இச்சுற்றுலாவிற்கான கட்டணம் ரூ.1000.மேலும் ஒரே நாளில் 10 அம்மன் கோயில்கள் சுற்றுலா உள்ளது. அது சென்னை திருவல்லிகேணி சுற்றுலா வளாகத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு கற்பகாம்பாள் கோயில், மயிலாப்பூர் முண்டகண்ணி அம்மன் கோயில், மயிலாப்பூர் கோலவிழியம்மன் கோயில், மயிலாப்பூர் ஆலயம்மன் கோயில், தேனாம்பேட்டை முப்பாத்தம்மன் கோயில், தி.நகர் பிடாரி இளங்காளி அம்மன் கோயில், சைதாப்பேட்டை அஷ்டலட்சுமி கோயில், பெசன்ட் நகர் காமாட்சி அம்மன் கோயில், மாங்காடு தேவி கருமாரியம்மன் கோயில், திருவேற்காடு பாதாள பொன்னியம்மன் கோயில், கீழ்பாக்கம் ஆகிய கோயில்களில் தரிசனம் செய்யலாம்.

அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும். இச்சுற்றுலாவிற்கான கட்டணம் ரூ.800.http://www.ttdconline.com என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். விவரங்களுக்கு 180042531111, 044-25333333, 044-25333444 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம், என அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.