Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

துலாம் ராசியினரின் மனநலம்

துலாம் ராசி சுக்கிரனுக்கு உரிய ராசியாக இருப்பதாலும், அங்கு சனி உச்சம் பெறுவதாலும், சுக்கிரன் சனி ஆதிக்கம் என்பது கருப்பை தொடர்பான சில பிரச்னைகளை உருவாக்கும். மற்ற ராசி இலக்கினத்தாரைவிட துலாம் ராசியினருக்கு, சில பிரச்னைகள் வர வாய்ப்புகள் சற்று அதிகம். மேலும், ஆங்கிலத்தில் ``ஹிஸ்டரியா’’ என்ற சொல் மன பிரச்னைகளைக் குறிக்கும். இச்சொல்லின் மூல வடிவம் கிரேக்க மொழியில் உள்ள ஹுஸ்த்ரா ஆகும். இச்சொல், பெண்ணின் கருப்பையைக் குறிக்கும். இவற்றில் பிரச்னைகள் ஏற்படும் போது, பெண்ணுக்கு ஹிஸ்ட்டிரியா வர வாய்ப்புண்டு என்று முற்காலத்தில் மருத்துவ வல்லுநர்கள் கருதினர். பின்னர் ஹிஸ்ட்டிரியா வருவதற்கு இந்த காரணம் மட்டுமே போதாது, வேறு பல காரணங்களும் உண்டு என்றனர்.

காதல் திருமணம்

பெண்ணின் காதல் ஏக்கத்தை அல்லது காதலை நோய் என்று கருதும் போக்கு சங்க கால முதல் இக்காலம் வரை இருந்து வருகின்றது. இதற்குக் காரணம் சுக்கிரனோடு பாவ கிரகங்கள் சேர்க்கை ஏற்படுவதுதான். இவர்கள் தன் மனதில் இருக்கும் ஆசைகளையும் ஏக்கத்தையும் வெளியே சொல்வது கிடையாது. இதனால், மனதிற்குள்ளேயே புழுங்கி புழுங்கி சில நேரம் தானாகவே அழத் தொடங்கி விடுவர். அதனால் கிராமங்களில் ஒரு பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கிறது என்றால், கல்யாணம் செய்தால் சரியாகிவிடும் என்று சொல்லி உடனே திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.

மன நிறைவான தாம்பத்திய வாழ்க்கை அமையும் போது, பெண்களின் மனநலம் சீரோடும் சிறப்போடும் அமையும். தாம்பத்தியம் சீர்குலையும் போது அவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி வெளியே தெரிவிக்கவும் இயலாமல் டிப்ரஸிவ் சைக்கோசிஸ் (Depressive Psychosis) என்ற மன பிரச்னைக்கு ஆளாகி விடுவார்கள். துலாம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம். சிலர் இன்ட்ரோவர்ட் (Introvert) என்ற அக மன நோயாளிகளாக மாறிவிடுவர். இவர்களுடைய பிரச்னை என்னவென்று யாருக்கும் தெரியாது. யாரிடமும் அதிகமாக பேச மாட்டார்கள். கலந்து பழக மாட்டார்கள். தனியாகவே இருந்து, தனியாகவே இருப்பார்கள்.

சுக்கிரன் வலுவாக அமையாவிட்டால், ஒரு பெண்ணின் காதல் வாழ்வு பிரச்னையாகிவிடும். குரு வலு குறைந்து பிரச்னைகள் அமைந்திருந்தால், போகசுகம் கிடைக்காது. சுக்கிரன் வலு குறைந்து இருக்கும்போது, பெண்ணின் கருப்பை தொடர்பான பிரச்னைகள் தாக்கும். சிலர் தனது துன்பத்தை மறைக்க தன் உள் மனதின் ஏக்கங்கள் வெளியே தெரியாமல் இருக்க மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பது போல எப்போதும் எல்லோருடனும் நகைச்சுவையாக பேசிக் கொண்டு, சிரித்துக் கொண்டே (சோஷியலாக) இருப்பார்கள். தங்களைப் பற்றிய எல்லா விஷயங்களையும் வெளியே சொல்வார்கள். ஆனால், தங்களின் துக்கத்தை மட்டும் யாரிடமும் சொல்வதில்லை.

குழந்தை இல்லாதவர்கள் சிலர் மற்றவர்களின் குழந்தையை தங்களுடைய குழந்தை போல எடுத்து கொஞ்சி மகிழ்வார்கள். இவர்களில் சிலர் குழந்தைகளைத் தத்தெடுத்து பெருந்தன்மையாக நடந்து கொள்வார்கள். கருப்பை பிரச்னை இருப்பவர்களுக்கு அடிக்கடிஅது சம்பந்தமான பிரச்னைகள் தோன்றும். வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்றவை வரும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது.

ஆடவரின் காதல்

ஆண்களுக்குச் சுக்கிரன் வலுக் குறைந்து இருந்தால், அவர்கள் காதலிக்கும் பெண்கள் பாதியிலேயே அவர்களை விட்டுச் சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். காதல் தோல்வி இவர்களுக்குத் தங்கள் மீது ஒருவித பரிதாபத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் வலுவாக இல்லாத போது காதல் தோல்வி ஏற்படும். அப்போதும் இவர்களுடைய மன அழுத்தம் பாதிக்கப்படுவதுண்டு. சுக்கிரன் வலு இழந்து இருக்கும்போது ஆண்களுக்கு சர்க்கரை நோய்கள் வர வாய்ப்புள்ளது. இவர்களுக் கென்று சிறப்பு உணவுகளை அவர்கள் சமைத்து தர நேரிடும்.