மதுரை, டிச. 6: மதுரை மாநகராட்சி கமிஷனர் பெயரில் போலி வாட்ஸ் ஆப் சமூக வலைதள கணக்கு தொடங்கி நடந்துள்ள பணம் பறிக்கும் முயற்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சிகமிஷனராக இருப்பவர் சித்ரா விஜயன். இவரது உருவப் படத்துடன் கூடிய போலியான வாட்ஸ் ஆப் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் மாநகராட்சியின் 60வது வார்டைச் சேர்ந்த ஷியாம் என்பவரிடம், அவசர தேவை இருப்பதாக கூறி, நூதன முறையில் பணம் பறிக்கும் முயற்சி நடந்துள்ளது.சில மாதங்களுக்கு முன் மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் பெயரை பயன்படுத்தி போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டிருந்தது. அடுத்தகட்டமாக தற்போது0 மாநகராட்சி கமிஷனர் பெயரில் இதேபோல் போலி சமூக வலைதள கணக்கு துவங்கி பணம் பறிக்கும் முயற்சி நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, விசாரணை நடந்து வருகிறது.

