மதுரை, டிச. 6: மதுரை, சின்ன சொக்கிக்குளம் உழவர் சந்தையில், வேளாண் வணிகப்பிரிவின் துணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார். மதுரை, சின்ன சொக்கிகுளத்தில் அமைந்துள்ள உழவர் சந்தையில், வேளாண் வணிக துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி ஆய்வு மேற்கொண்டார். தற்போது பருவ மழைக்காலம் என்பதால் மழை நீர் தேங்காமல் இருக்க உழவர் சந்தையில் பேவர் பிளாக் கற்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை ஆய்வு செய்த அவர், பணிகளை விரைந்து முடிக்கும்படி கூறினார். மலும் உழவர் சந்தையில் நடைபெற்று வரும் மற்ற பணிகள் குறித்தும் ஆய்வு நடத்தினார். குப்பைகள் தேங்காமல் உழவர் சந்தை பகுதியை, சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என்று, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது உழவர் சந்தை வேளாண் அதிகாரி சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

