Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேர்களைத் தேடி திட்டத்தின் கீழ் அயலக தமிழ் மாணவர்கள் கீழடியை பார்த்து பரவசம்

திருப்புவனம்: பண்டைய தமிழர்களின் கட்டிடம், சிற்பக் கலை, பாரம்பரிய கலாசார முறைகளை, இளைய தலைமுறை, மாணவ மாணவியர்கள் அறிந்து கொள்வதற்காக வேர்களைத்தேடி என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அயலக தமிழ் மாணவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டு வருகின்றனர். கனடா, தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, மொரிஷியஸ், இந்தோனேஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 115 தமிழ் மாணவர்கள் நேற்று மாலை, சிவகங்கை மாவட்டம் கீழடிக்கு வருகை தந்தனர். அங்கு நடைபெற்று வரும் 10ம் கட்ட அகழாய்வு பணிகள் மற்றும் அருங்காட்சியகத்தினை பார்வையிட்டு ஆச்சரியப்பட்டனர். இதில் 2 ஆயிரம் ஆண்டுகள் முன்னதாக வாழ்ந்த தமிழர்களின் தொன்மை மற்றும் பாரம்பரிய வாழ்வியல் முறைகள் குறித்தும் அறிந்து கொண்டனர்.

இதுகுறித்து சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் கூறுகையில், ‘‘இத்திட்டத்தின் முடிவில் அயலகத்திலிருந்து பங்குபெறும் இளைஞர்கள், அவர்களது நாடுகளுக்கான தமிழ்நாட்டின் கலாச்சார தூதர்களாகவும் நியமிக்கப்பட உள்ளனர்’’ என்றார். இதில் மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் திருவாசன், கீழடி ஊராட்சி மன்றத்தலைவர் வேங்கடசுப்பிரமணியன், உதவி சுற்றுலா அலுவலர் ஜான்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.