Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெண்களும் ஆபரணங்களும்!

நன்றி குங்குமம் தோழி

பெண்கள் நகை அணிவது என்பது நம்முடைய பாரம்பரியத்தில் ஒன்று. அழகுக்காக நகைகள் அணிந்தாலும், அதனை பெண்கள் தங்களின் உடலில் அணியும் போது அதற்கான தனித்தன்மைகள்

உள்ளன. பெண்கள் உடலில் அணியக்கூடியது என சில நகைகள் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அதனை அணிவதால் ஏற்படும் ஆரோக்கியம் குறித்து தெரிந்து கொள்ளலாம். நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்ம புள்ளிகளைத் தூண்டுவதால், அது உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்க உதவுகிறது. வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது. வெள்ளி நகைகள் நமது ஆயுளை விருத்தியடைய உதவுகிறது. ஆபரணங்கள் அணிவதால் நோய்கள் மறைமுகமாக கட்டுப்படுத்தப்படுகின்றன. தங்கம் மட்டுமின்றி வெள்ளி, முத்து, பவளம் போன்ற நகைகளை அணிவதாலும் நன்மைகள் ஏற்படும்.

* மோதிரம்: மோதிர விரலில் பாயும் நரம்பு நம் மூளையிலிருந்து இதயத்திற்கு இணைக்கப்பட்டுள்ளது. நம்மைச் சந்தோஷப்படுத்தும் ஹார்மோன்களைத் தூண்டுவதற்கு கட்டை விரலில் மோதிரங்கள் அணியலாம். பெரும்பாலானவர்கள் நடு விரல்களில் மோதிரம் அணிவதில்லை. அவ்வாறு அணிந்தால், முடிவுகள் எடுக்கும் திறன் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

* காது கம்மல்: ஆண், பெண் எந்தக் குழந்தையாக இருந்தாலும், காது குத்தி, தோடு போடுவது வழக்கமாக உள்ளது. பெண்களுக்கு காது நரம்புகளுடன் கண்கள் இணைக்கப்பட்டிருப்பதால், நல்ல கண் பார்வைக்கு தோடுகள் உதவுகின்றன.

*மூக்குத்தி: வயதுக்கு வந்ததும், மாதவிடாயினால் தோன்றும் வலிகளைக் குறைக்கவே மூக்குத்தி அணியப்படுகிறது. இடது மூக்கில் மூக்குத்தி அணிவதால், உயிர் உற்பத்தி செய்யும் உறுப்புகளைத் தூண்டி, குழந்தை பிறப்பு எளிதாவதாகக் கூறப்படுகிறது.

* கழுத்து ெசயின்/நெக்லெஸ்: செயின் அல்லது நெக்லஸ் அணிவதால், பாஸிட்டிவ் எனர்ஜி கிடைக்கிறது. மேலும், ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும் கழுத்தணிகள் உதவுகின்றன.

*வளையல்: சீரான ரத்த ஓட்டத்திற்கு கை கொடுக்கும். வளையல்கள் வட்ட வடிவில் இருப்பதால், அதன் மூலம் தூண்டப்படும் மின் காந்த ஆற்றல் உடலுக்குள் செலுத்தப்படும்.

இதனால் எனர்ஜி அதிகரித்து வலுவாக உணர்வார்கள்.

*நெற்றிச்சுட்டி: உடம்பில் உள்ள வெப்பத்தைக் கட்டுப்படுத்துகிறது.

*ஒட்டியாணம் அல்லது அரைஞாண் கயிறு: மாதவிடாய் பிரச்னைகளை தீர்க்கும். வெள்ளியினாலான இடுப்பணிகலன் அணிந்தால் வயிற்றுக் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

*கொலுசு: இதிலிருந்து வெளியாகும் ஒலி பாஸிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும். எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வலிகளை நீக்கும்.

* மெட்டி: கருப்பை மற்றும் இதயத்தை இணைக்கும் நரம்பு, இந்த விரல் வழியாகப் பாய்வதால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்த இழப்பை சீராக்குவதோடு, பிரசவ காலத்திலும் உதவுகிறது. பொதுவாகவே, ரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்துவதில் மெட்டி ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.

தொகுப்பு: பிரியா மோகன்