Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பனிக்கால சரும பாதுகாப்பு

நன்றி குங்குமம் தோழி

பொதுவாக பனிக் காலத்தில் சருமம் வறண்டு செதில் படிந்து காணப்படும். இதனால் முகம் மற்றும் உதட்டுப் பகுதியில் சருமம் வறண்டு வெடிப்பதால் சருமம் பொலிவிழந்த தோற்றம் அளிக்கும். இந்தப் பிரச்னைகளிலிருந்து உங்கள் முகத்தைப் பாதுகாக்க சில டிப்ஸ்...

* பாலாடையுடன் சிறிது எலுமிச்சைச் சாறுப் பிழிந்து முகம், கை, கால்களில் தேய்த்து ஊறியப் பிறகு குளித்தால் வறண்ட சருமம் பொலிவும் பெறும்.

* பாலாடையுடன் கசகசாவை ஊறவைத்து அரைத்து முகம் மற்றும் கை, கால்களில் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிப்பதும் சருமத்தை மென்மையாக்கும்.

* வறண்டச் சருமம் கொண்டவர்கள் பப்பாளி, ஆப்பிள் போன்றவற்றைத் தவறாமல் சாப்பிட வேண்டும்.

* எல்லா வகை சருமத்தினரும் தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும்.

* ½ கிலோ துவரம் பருப்பு, 100 கிராம் பாசிப்பருப்பு, 25 கிராம் கசகசா, 100 கிராம் கஸ்தூரி மஞ்சள் இவற்றை மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை தினந்தோறும் முகம் முதல் பாதம் வரை தேய்த்துக் குளிக்கவும். தொடர்ந்து இவ்வாறு 1 மாதம் செய்து வந்தால் தோலின் வறட்சி தன்மை நீங்கி மிருதுவாக ஜொலிக்கும்.

* பனிக் காலங்களில் தோல் நோய்கள் வராமல் இருக்க வேண்டுமானால் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

* பனிக் காலத்தில் உடலுக்குப் பயத்தம் மாவு, கடலை மாவு தேய்த்துக் குளிக்கக் கூடாது. அது சருமத்தில் இருக்கும் கொஞ்ச நஞ்ச எண்ணெய் பசையையும் உறிஞ்சிவிடும்.

* மிகவும் வறண்ட சருமக்காரர்களுக்கு பனிக்காலத்தில் தோலில் அரிப்பு, வெடிப்புப் போன்றவை ஏற்படலாம். இவர்கள் தினமும் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து தேய்த்துக் குளித்து வர வேண்டும்.

தொகுப்பு: எஸ்.செசிலியா, கிருஷ்ணகிரி.