Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குளிர் காலமும் வைட்டமின்களும்!

நன்றி குங்குமம் தோழி

எவ்வளவு வெயிலை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்ளலாம். தாகம் தணிக்க குளிர்ந்த பானங்கள், கடற்கரையில் காற்று வாங்குவது, நான்கைந்து முறை குளியல் என வெயிலை சமாளிக்கப் பல வழிகள் உள்ளன. ஆனால், குளிரின் பாதிப்பிலிருந்து தப்பிப்பது அத்தனை சுலபமல்ல... இந்தக் காலங்களில் நம் உடலை எவ்வாறு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.குளிர் காலத்தில்தான் நம்ம உடலின் உஷ்ணம் அதிகமாகும். அதனால்தான் நம் உடலை குளுமையாக வைத்துக் கொள்ள குளிர் காலங்களில் கமலா ஆரஞ்சு, சீத்தாப்பழம் போன்ற பழங்களை நாம் அதிகமாக பார்க்க முடியும். இவை அனைத்தும் குளிர்கால சீதோஷ்ண பழங்கள்.

தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறி, பழங்களை இந்த நாட்கள்ல நிறைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக நம் சுற்றுப்புறச்சூழல் குளிர்ச்சியாக இருப்பதால், இந்த காலக்கட்டத்தில் வெயில் காலம் போல் தாகம் எடுக்காது. அதனால் நாமும் அதிகம் தண்ணீர் குடிக்க மாட்டோம். ஆனால் அது தவறான செயல். தாகம் எடுக்கவில்லை என்றாலும் தண்ணீர் குடிப்பதை அவசியமாக கொள்ள வேண்டும்.

குளிரின் தாக்கத்தினால் பலருக்கு அதிகமாக முடி உதிரும். பொடுகு பிரச்னையும் அதிகரிக்கும். கண் மற்றும் பாதங்களில் எரிச்சல் ஏற்படும். மலச்சிக்கல் பிரச்னை இருக்கும். வியர்வை வெளியேறாததால், சருமத் துவாரங்கள் சுருங்கி, பொலிவிழக்கும். இதனால்தான் குளிர் காலத்தில் சருமம் வறண்டும், பொலிவிழந்தும் காணப்படுகிறது.சரும ஆரோக்கியம் என்பது வெளிப்புறத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை மட்டுமல்ல... நாம் உண்ணக்கூடிய உணவையும் பொறுத்தது. முறையான ஊட்டச்சத்தான உணவு, சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. குளிர்காலத்தில் நம் உடல் ஆரோக்கியமாகவும் சருமம் பொலிவுடன் இருக்க சில வைட்டமின்கள் அவசியம்.

வைட்டமின் டி: சூரிய ஒளியில் வைட்டமின் டி இருக்கிறது. சூரிய ஒளி வைட்டமின், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவைக் கட்டுப்படுத்தி எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

வைட்டமின் சி: வைட்டமின் சி

அல்லது அஸ்கார்பிக் அமிலம் என்பது நீரில் கரையக்கூடிய ஆக்ஸிஜனேற்றியாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைரஸ் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது. குளிர் காலத்திற்கான சிறந்த வைட்டமின்களில் ஒன்றாகும். இது உங்களின் உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது. உடல் இயற்கையாகவே வைட்டமின் சியை உற்பத்தி செய்யாததால், ப்ரோக்கோலி, சிட்ரஸ் பழங்கள், இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற உணவுகள் மூலமாக வைட்டமின் சியை பெறலாம்.

வைட்டமின் பி: வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், பி1 முதல் பி12 வரை குளிர்காலத்தில் இன்றியமையாதவை ஆகும். பைரிடாக்சின் எனப்படும் வைட்டமின் பி6 குளிர்காலத்தில் சருமத்தை மிருதுவாக்க செய்யும். B1 மற்றும் B2 போன்ற வைட்டமின்கள், மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் மனநிலை மற்றும் ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தை ஆதரிக்கின்றன.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம்: குளிர் காலங்களில் ஒமேகா-3 மூளை ஆரோக்கியம் மற்றும் மனநிலை மேம்பாட்டிற்கு பங்களிக்கிறது. உடல் வீக்கத்தைக் குறைப்பதற்கும் தடுப்பதற்கும் சக்தி வாய்ந்த மூலமாக இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. சரும ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. நமது உடலால் அத்தியாவசியமான ஒமேகா-3களை உற்பத்தி செய்ய முடியாது என்பதால், அவற்றை நமது உணவில் சேர்த்துக்கொள்வது மிக மிக முக்கியமானது.குளிர் காலத்தில் இந்த அனைத்து வைட்டமின்களும் முக்கியம் என்றாலும், வைட்டமின் சி என்பது இன்றியமையாத ஒன்றாகும். குளிர்காலத்தில் வைட்டமின் சி போதுமான அளவு உட்கொண்டால், குளிர் காற்றிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், முடி மற்றும் சருமத்தை அழகாக மாற்றும்.

தொகுப்பு: பிரியா மோகன்