Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வீட்டை பராமரிக்க டிப்ஸ்...

நன்றி குங்குமம் தோழி

வீடு நாம் அனைவரும் வசிக்கும் இடம். அது சுத்தமாக இருந்தால்தான் நம்மால் அந்த வீட்டில் மன நிறைவோடு வாழ முடியும். அதனால் நாம் அதனை பராமரிக்க சின்னச் சின்ன டிப்ஸ்களை பின்பற்றலாம்...

*மாதா மாதம் வீட்டை ஒட்டடை அடிக்க வேண்டும்.

*கதவின் கீல்கள் சப்தமிடுவது, மரம் விரிவடையும் போது கதவு சரிவர மூடாமல் இருப்பது போன்றவை முக்கிய பிரச்னைகள். இது குறிப்பாக மழைக்காலங்களில் அதிகளவில் ஏற்படும். இந்த கீல்களின் சப்தத்தை நிறுத்த கிரீஸ், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

*உப்பு காகிதத்தை பயன்படுத்தி கதவை தேய்த்து அவ்வப்போது மென்மையாக்கலாம். இதனால் கதவுகள் நன்றாக மூடக்கூடும்.

*மோசமான பிளம்பிங், விரிசல் (கிராக்) போன்ற பல காரணங்களால் சுவர்களில் கறைகள் படியக்கூடும். இவற்றை அவ்வப்போது கவனித்து சரிசெய்து, தரமான ஸ்டெயின் கிளீனரை பயன்படுத்தி கறைகளை அகற்றலாம்.

*வீட்டிலுள்ள தண்ணீர் பைப்களில் தண்ணீர் ஸ்மூத்தாக வருவதற்கு சிறியளவிலான பில்டர் இணைக்கப்பட்டிருக்கும். உப்புத்தண்ணீரை பயன்படுத்தும்போது நாளடைவில் அதில் உப்புகள் படிந்து, தண்ணீர் வரத்து குறையக்கூடும். அவ்வப்போது பில்டரை கழற்றி சுத்தம் செய்யலாம். குழாய்கள், ஷவர்கள் என அனைத்தையும் சுத்தம் செய்யலாம்.

*கழிவுநீர் வெளியேறும் வடிகால் பாதையையும் முடிந்தளவு சுத்தமாக வைத்திருக்கவும்.

*தினசரி மற்றும் வாரம்தோறும் வழக்கமாக வீட்டை சுத்தப்படுத்துவதை தவிர, ஆண்டுதோறும் ஓரிரு முறை ‘டீப் கிளீனிங்’ செய்வது அவசியம். இதற்காக பல நிறுவனங்கள் உள்ளன. அவர்களை அணுகினால் உங்களுக்கு வேலை இல்லாமல் உங்கள் வீட்டினை பளிச்சென்று மாற்றிவிடுவார்கள்.

*பீரோ, கட்டில், அலமாரிகளின் அடிப்பகுதி மற்றும் பின்புறம், ஃபேன், லைட், டிவிக்கு பின்பகுதி என ஆங்காங்கே முழுமையாக தூசிகளை சுத்தப்படுத்துவது அவசியம்.

- சௌமியா சுப்ரமணியன், சென்னை.