Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாசகர் பகுதி - வெயிலில் கண்களை பாதுகாக்க...

நன்றி குங்குமம் தோழி

* கண்கள் பளபளப்பாகவும், பொலிவுடனும் இருக்க தினமும் இரவில் கண் இமைகளில் விளக்கெண்ணெயை ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் விடலாம்.

* இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெயை வாரம் ஒருமுறை கண்களில் விட்டு வர பிரகாசமாக இருக்கும்.

* பாதாம் பருப்பினை பாலுடன் சேர்த்து அரைத்து கண்களைச் சுற்றி பேக் போடுவதால் கருவளையும் மறையும்.

* சந்தனக் கல்லில் சாதிக்காயை அரைத்து இரவில் பூசி வந்தால் கருவளையம் விரைவில் மறையும்.

* வெள்ளரிக்காயை அரைத்தோ அல்லது வட்டமாக நறுக்கியோ கண்களின் மீதும், கண்களை சுற்றியும் பேக் போட்டால், கண்களுக்கு குளிர்ச்சி.

* கண்களின் இமைகளில் ஏற்படும் கட்டியை போக்க துளசி இலைச் சாற்றை பூசலாம்.

* தேயிலைத் தூளை கொதிக்க வைத்து வெள்ளைத் துணியை அதில் நனைத்து கண்களின் மேல் வைத்தால் கருவளையம் நீங்கி கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும்.

* கருஞ்சீரகத்தில் 100 கிராம் நல்லெண்ணை சேர்த்து புகை வரும் அளவிற்கு காய்ச்சி கண்ணின் மேலும் சுற்றியும் தேய்த்துக் கழுவினால் கண் எரிச்சல் நீங்கும்.

* திரிபலா சூரணத்தை ஒரு சிட்டிகையளவு எடுத்து ஒரு கப் நீரில் இரவே கலந்து அந்த நீரைக் கொண்டு காலையில் கண்களைக் கழுவினால் கண்கள் நன்றாக ஒளி வீசும்.

* உருளைக்கிழங்கை அரைத்து கண்களை சுற்றியும் கண்களின் மேலும் பேக் போட கருவளையங்கள் மறையும்.

* கண்களை இடது-வலதாக, மேலும் கீழுமாக சுற்ற வேண்டும். இவ்வாறு 5 முறை செய்து, கண்களை இறுக்கமாக மூடித் திறக்க வேண்டும். இவ்வாறு 5 முறை செய்ய வேண்டும். இது கண்களுக்கான சிறந்த பயிற்சி.

* நந்தியாவட்டை பூவை பறித்து நீரில் கழுவி வெள்ளைத் துணியில் சுற்றி கண்களின் மேல் வைத்து கட்டி வர கண்கள் பிரகாசமாகும்.

* கண்களை தினமும் பன்னீரால் துடைக்க கண்கள் புதுப்பொலிவு பெறும்.

* அடிக்கடி குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். அப்படி செய்தால் முகச்சோர்வு நீங்கும்.

* கோடை காலத்தில் பாதிக்கப்படுவது கண்தான் செல்போனை குறைந்த அளவுக்கு பயன்படுத்துவோம்.

தொகுப்பு: கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்.