Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாசகர் பகுதி- துணிகளில் படியும் கறைகளை போக்க!

நன்றி குங்குமம் தோழி

* துருக் கறை பட்டால் எலுமிச்சை சாற்றில் உப்பு கலந்து நன்கு தேய்த்து விட்டு அலசி துவைத்தால் நீங்கி விடும்.

* சேற்றுக்கறை பட்டால் உருளைக்கிழங்கை தேய்த்துவிட்டு துவைத்தால் கறை போய் விடும்.

* தார் கறை பட்டால் டர்பன்டைனை தேய்த்து விட்டு, பிறகு வெதுவெதுப்பான நீரில் அலசி, துவைக்கலாம்.

* எண்ணெய் கறை பட்டால் மேலும், கீழும் பிளாட்டிங் பேப்பர் வைத்து இஸ்திரி செய்தால் கறை அகலும்.

* பழக்கறை படிந்தால் சிறிது அமோனியாவை பஞ்சினால் தொட்டு துடைத்தால் கறை நீங்கிவிடும்.

தொகுப்பு : ஆர்.பத்மப்ரியா, திருச்சி.