Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாசகர் பகுதி- தலை முடி பராமரிப்பு

நன்றி குங்குமம் தோழி

* நீராகாரம் எனப்படும் பழைய சோற்றின் தண்ணீரால் தலைக்கழுவி வந்தால் தலைமுடி கருகருவென பளபளக்கும்.

* விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயும் சம அளவு கலந்து தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும்.

* சந்தனக் கட்டையை பற்ற வைத்துப் புகையை தலையில் காட்டினால் பேன் தொல்லையை கட்டுப்படுத்தலாம்.

* இளவயது நரைக்கு இலந்தை மர இலைகளை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர, நரை விலகும்.

* தாமரைப்பூவை கஷாயம் செய்து தினம் இரண்டு வேளை என தொடர்ந்து பருகி வர, இளநரை விலகும்.

* உளுந்து மாவை தலையில் பூசிய பின் சீயக்காய் தூள் உபயோகித்து தலைக்குளித்தால் தலைமுடியில் அதிகம் உள்ள எண்ணெய் தன்மை நீங்கிவிடும்.

* ஒரு கப் தேநீர் டிக்காஷனில் ஒரு டீஸ்பூன் உப்பும் சேர்த்து தினமும் தலை கழுவி வந்தால் இளம் நரையை பெருமளவுக்கு தடுத்துவிடலாம்.

* சாம்பார் வெங்காயத்தின் சாற்றைப் பிழிந்தெடுத்து தலையில் அழுத்தித் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவ வேண்டும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் தலைமுடி உதிர்வதை முற்றிலுமாக தடுக்கலாம்.

* நான்கு நெல்லிக்காயை எடுத்து நன்றாக நசுக்கி பாலிலிட்டு ஊற வைத்து, மறுநாள் அந்த புளித்த பாலை தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து கழுவினால், வாரத்தில் மூன்று

முறை இவ்வாறு செய்தால் தலைமுடி வேகமாக வளரும்.

தொகுப்பு: டி.லதா, நீலகிரி.