நன்றி குங்குமம் தோழி
உலக மகளிர் தினம்
*முகலாய சக்கரவர்த்தி அக்பரின் காலத்தில் கோன்டீவானா நாட்டை துர்காவதி என்ற அரசி ஆண்டு வந்தாள். அவள் மிகச் சிறந்த வீரப்பெண்மணியாக விளங்கினாள்.
*ஷிரின் எபாடி என்ற பெண்மணிக்கு 2003-ம் ஆண்டு அக்டோபர் பத்தாம் நாள் ஜனநாயகத்திற்காகவும், மனித உரிமைகளுக்காகவும் குறிப்பாக குழந்தைகள், பெண்களுக்காக போராடியதற்காகவும் அமைதிக்கான ேநாபல் பரிசு கொடுக்கப்பட்டது.
*கொண்டேலிசா ரைஸ் என்ற கறுப்பர் இன அமெரிக்க பெண்மணியை டைம் என்னும் அமெரிக்கப் பத்திரிகை உலகின் நூறு முக்கிய மாணவர்களில் ஒருவர் என நான்கு முறை தேர்ந்தெடுத்துள்ளது.
*பர்மாவைச் சேர்ந்த ஆங்சான் சூகிக்கு 1990ம் ஆண்டு நாப்டே மனித உரிமை பரிசு வழங்கப்பட்டது. நார்வே நோபல் பரிசுக் கமிட்டி 1991ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்குரியவராக சூகியை அறிவித்தது. அதன்படி 1992ம் ஆண்டு நோபல் பரிசினைப் பெற்றார்.
*வாலண்டினா தெரஷ்கோவா உலகின் முதல் விண்வெளி வீராங்கனையாக 1963 ஜூன் மாதம் 16, 17, 18 மற்றும் 19 ஆகிய நாட்கள் வான்டாக்-6 ரக விண்கலத்தில் பறந்து புவியை நாற்பத்தெட்டு முறை சுற்றி வந்து மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தினார்.
*கிரேஸ் முர்ரே ஹாப்பர் முதலாவது கணினியின் இயல் மொழியை சாதாரண ஆங்கிலத்திற்கு மொழி பெயர்ப்பதை 1959ம் ஆண்டு கண்டுபிடித்தார். Flow Matric எனும் தனது சொந்தக் கண்டுபிடிப்பிலிருந்து COBO2 வரையில் கணினி இயலை வளர்த்து உலகையே கணினி மயமாக்கிய பெருமை கிரேஸைத்தான் சேரும்.
*பாலின் ராமர்ட் லூகாஸ் பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது பெற்ற முதல் பெண்மணி. இரு நூறுக்கும் மேலான கண்டு பிடிப்புகளை கண்டுபிடித்தவர்.
*பிரிட்டனில் தனியாக தொலைபேசி இணைப்பு வைத்துக் கொண்ட முதல் பெண்மணி ராணி விக்டோரியாதான். 1878 ஜனவரி பதினான்காம் தேதி முதல் முறையாக தனக்காக அமைக்கப்பட்ட தொலைபேசியில் அவர் பேசினார்.
தொகுப்பு: ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.