Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முகத்தை வசீகரமாக்கும் மாதுளை

நன்றி குங்குமம் தோழி

மாதுளம்பழம், பூ, பட்டைனு எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைஞ்சது. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று வகை சுவைகள் உள்ளன. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடையை குறைக்க மாதுளை உதவுகிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் துணை புரிகிறது. இவ்வாறு பல மருத்துவ குணங்கள் கொண்ட மாதுளை நம்முடைய முகத்தை வசீகரிக்கவும் பயன்படுகிறது.

* மாதுளை தோல்கள் மட்டும் 50% பயன்களை உள்ளடக்கியுள்ளது.

* மாதுளை தோல் அதிக ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது.

* மாதுளையின் தோல், பழம், பூ, பட்டை, காய் ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டது.

* மாதுளை, நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கும் தன்மை கொண்டது. எனவே மாதுளை சாப்பிட்டால், மனஅழுத்தம் குறையும்.

* மாதுளம் பழ தோலை ஸ்கரப் வடிவத்தில் பயன்படுத்தும் போது, இறந்த செல்களையும், கரும்புள்ளி மற்றும் வெண் புள்ளிகளையும் நீக்க உதவுவதோடு, முகத்தை ஜொலிக்க வைக்கிறது.

* மாதுளம் பழ தோல் பொடி 2 ஸ்பூன் அத்துடன் ஒரு ஸ்பூன் பழுப்பு சர்க்கரை, ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் அவகேடா எண்ணெயை சேர்த்து நன்கு கலக்கி பேஸ்ட் போல தயாரித்து, முகம் முழுவதும் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து தண்ணீரில் கழுவினால் மென்மையான மிருதுவான சருமத்தை உணரலாம். ஸ்க்ரப்பிங் செய்த பிறகு டோனர் மற்றும் மாய்ஸ்சரைசரை பயன்படுத்தவும்.

அலமாரிகளில் உடைகளை பராமரிக்க டிப்ஸ்!

* உடைகளின் நிறத்துக்கேற்ப வரிசைப்படுத்தவும்.

* புடவை, சட்டை போன்ற உடைகளை ஹேங்கரில் மாட்டும் போது நிறத்தின் அடிப்படையில் வரிசையாக மாட்டவும்.

* இரவு உடைகள் மற்றும் தினசரி உடைகளை தனியாக பிரித்து அடுக்கலாம்.

* வெளியிடங்களுக்கு செல்லும் போது அணியக்கூடிய உயர்ரக உடைகளை ஒரே பக்கத்தில் அடுக்கி வைக்கவும்.

* சுடிதார், துப்பட்டா, நைட்டி போன்ற தினசரி உடைகளையும், உள்ளாடைகளையும் அழகாக மடித்து வைக்கவும்.

* டெனிம் ஜீன்ஸ், ஸ்கர்ட்ஸ், லெக்கின்ஸ் போன்றவற்றை அயர்ன் செய்ய வேண்டிய அவசியம் இல்லாததால், மடித்து வைத்தாலே போதும்.

* இப்போது மார்க்கெட்டில் துணிகளை வைக்கக்கூடிய பாக்ஸ்கள் உள்ளன. அதை பயன்படுத்தினால் விரும்பும் உடைகளை விரும்பிய நேரத்தில் அணிந்து மகிழலாம்.

- சௌமியா சுப்ரமணியன், சென்னை.