Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாரம் ஒருமுறையாவது தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

பெண்களின் மனநிலையை பாதிக்கும் விஷயத்தில் ஒன்று தலைமுடி உதிர்வு. இந்தப் பிரச்னை ஏற்பட எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் ஊட்டச்சத்து குறைபாடு என்பது ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். அதனை சமாளிக்க ஊட்டச்சத்துள்ள உணவினை நாம் அன்றாடம் சாப்பிட பழகிக் கொள்வது அவசியம். மேலும் கடைகளில் கிடைக்கும் வைட்டமின் மாத்திரைகளைத் தவிர்த்து, தினமும் கறிவேப்பிலை, கீரை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டாலே தலை முடி உதிர்வினை கட்டுப்படுத்த முடியும்.

முத‌லி‌ல் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலை முடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் குறைய காரணம் சத்துக்குறைவுதான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இருப்பதில்லை. இதனால் உடல் ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்னைகளும் ஏற்படும். குறிப்பிட்ட அளவு கால்சியம், வைட்டமின், தாது உப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் தலைமுடி உலர்ந்து காணப்படும் வாய்ப்புள்ளது. நோய்த் தொற்றுகள் ஏற்பட்டாலும் முடி கொட்டும். எனவே தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்னை என்ன என்பதை கண்டறிந்து அதன்படி சிகிச்சை பெறலாம்.

அதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள் சில சமயங்களில் சுரக்காது நின்று போனாலும் முடி கொட்டும். புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீட்ரூட், கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரப்பிகளை சரிசெய்ய முடியும் என்பது மருத்துவரின் கருத்து.

ஆரோக்கியம் ஒரு பக்கம் இருந்தாலும், நாம் நம் தலைமுடியினை முறையாக பராமரிக்க வேண்டும். அது மிகவும் முக்கியம். அதனை எவ்வாறு பராமரிக்கலாம் என்று தெரிந்து ெகாள்ளலாம்.

* குளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்‌றினா‌ல் கு‌ளி‌த்த ‌பிறகு கூ‌ந்த‌லி‌ல் அ‌திக ‌சி‌க்கு ஏ‌ற்படாம‌ல் இரு‌க்கு‌ம்.

*கண்ட ஷாம்புகளை உபயோகித்துப் பார்க்கும் ஆய்வுக்கூடமல்ல நம்முடைய தலைமுடி. எனவே, தலைமுடிக்கு ஏற்ற ஷாம்புகளையே பயன்படுத்துங்கள். அதிக அளவில் ஷாம்பு பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். அதேபோல் ஷாம்பு தடவிய முடியை நன்றாக ‌நிறைய த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு அலசவும்.

*தலைக்கு குளிக்கும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது அவசியமான ஒன்று. கண்டிஷனரை முடியின் வேர்களை விட நுனிப்பாகத்தில் தடவுவது நல்லது. கண்டிஷனர் தடவிய பிறகும் முடியை நன்றாக அலச வேண்டும்.

*தலைமுடியை ஷாம்பு போட்டுக் கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு கப் நீரில் கலக்கி தலைமுடியை கழுவுங்கள். உங்கள் தலைமுடி மிருதுவாகவும், பட்டு போன்று பளபளப்பாகவும்

இருக்கும்.

*மருதாணியை தலையில் தேய்த்து ஊறவைத்த பின் ஷாம்பூ போடுவது தவறு. மருதாணி மிகச்சிறந்த கண்டிஷனர். எனவே மருதாணிக்கு பிறகு ஷாம்பூ பயன்

படுத்துவது நல்லதல்ல. ஆகவே, முதல்நாளே ஷாம்பூ போட்டு குளித்து முடியை நன்கு காயவைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் மருதாணி தேய்த்து ஊறவைத்து

வெறுமனே அலசி விடலாம்.

*குளித்த பிறகு ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம். ஈரமான கூந்தலை வேகமாகத் துவட்டுவதை தவிருங்கள். அதற்கு பதிலாக உங்கள் கூந்தலை 5 நிமிடம் டவலில் சுற்றி வையுங்கள்.

*ஹேர் ட்ரையரை, முடியின் நுனிப்பாகத்தைவிட வேர்ப்பாகத்தில் நன்றாகக் காட்டுங்கள். நுனிகளில் காட்டுவதால் முடி உலர்ந்து உடையக்கூடும். ஹேர் ட்ரையரை அடிக்கடி பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும். அப்படி பயன்படுத்தும்போது ஹேர் ட்ரையரை கீழ் நோக்கி பிடிக்கவும். அதேபோன்று ஒரே இடத்தில் அதிக நேரம் காட்டுவதையும் தவிர்க்கவும். உலர்ந்த கூந்தல் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம்.

*உங்கள் தலைமுடியை பராமரிப்பதில் சீப்புக்கும் முக்கியப் பங்குண்டு. தலை‌க்கு கு‌ளி‌த்தது‌ம் உடனடியாக உ‌ங்க‌ள் ‌சீ‌ப்புகளையு‌ம் ந‌ன்கு கழுவுவது ந‌ல்லது. அகலமான பற்களைக் கொண்ட சீப்பினை பயன்படுத்தவும். கைகளால் முதலில் சிக்கு நீக்கிவிட்டு பின்னர் சீப்பை பயன்படுத்துவது நல்லது.

*உங்கள் தலைமுடியை நன்றாக மசாஜ் செய்யுங்கள். விரல் நுனிகளால் தலைமுடியை மெதுவாக தேய்க்கவும். இதனால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி நீளமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வளரும். வாரந்தோறும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.

*தலை‌‌க்கு எ‌ண்ணெ‌ய் வை‌க்கு‌ம் பழ‌க்கத்தை இப்போது யாரும் பின்பற்றுவதில்லை. அதனா‌ல் தலை‌க்கு‌ மட்டுமல்ல உட‌லுக்கும் பா‌தி‌ப்பு ஏ‌ற்படு‌ம். வார‌த்‌தி‌ல் ஒரு முறையாவது தலை‌க்கு எ‌ண்ணெ‌ய் வை‌‌ப்பதை பழ‌க்கமா‌க்‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். தலை முடியையு‌ம், சரும‌த்தையு‌ம் பாதுகா‌ப்போ‌ம்.